Feb 25, 2009

என்னை கவர்ந்த ஆத்மா -தொடர் பதிவு



அநியாயம் அநியாயம்

பொன்னாத்தா என்னை தொடர் பதிவு போட சொல்லி ஒரு வாரத்துக்கும் மேல ஆகுது....நான் தயாரா தான் இருந்தேன். ஆனா என்னை கவர்ந்த ஆத்மா யாருன்னு நான் அறிக்கை வெளியிட்டதும் பொன்னாத்தா ஒத்துழைப்பு குடுக்க மறுத்துட்டாங்க.

பதிவு படிச்சு முடிச்சுட்டு நீங்களே ஒரு பஞ்சாயத்து வைங்க.
என்னை தொடர் பதிவுல இழுத்ததுக்கு காரணமே என்னை பெத்த ஆத்தாவுக்கு நான் அவீகள தான் சொல்லுவேன்னு நினைப்பு..


ஹ்ம்ம்...நான் உலகத்துல எம்புட்டு பேரை சந்திக்குறேன்..பேசுறேன்...பழகுறேன்...என்னை கேக்காம எப்டி முடிவு செய்யலாம்.

சரி பொன்னாத்தாவை அப்புறம் சமாளிச்சுக்கலாம்.

எனக்கு நிறைய பேரை பிடிக்கும்....பொன்னத்தாவையும் பிடிக்கும். அப்புறம் அப்பா, ஜெயாம்மா, ஐஷு, அணு, எல்லா தாத்தாவும், எல்லா ஆச்சியும்....

இருந்தாலும் எனக்கு எங்க ஆச்சியம்மன்னா உசிரு....ஆச்சியம்மா யாருன்னா பொன்னத்தாவோட அம்மா.
நான் முதல்ல ஆச்சியம்மவை நான் 4 மாச குழந்தையா இருக்கும் பொது தான் பார்த்தேன்...அப்போ இருந்து இப்போ வரைக்கும் நாங்க ரெண்டு பெரும் பிரிஞ்சதே இல்ல.....


ஆச்சியம்மவை பார்த்த அதிசயமா இருக்கும்...எப்போ பார்த்தாலும் வேலை செஞ்சுட்டே இருப்பாங்க.....பொன்னாத்தா கூட இருந்தாலும் சரி ஜெயா அம்மா [பொன்னத்தாவோட அக்கா] கூட இருந்தாலும் சரி ..எல்லா வேலையும் ஆச்சியம்மா தான் பார்ப்பாங்க...சனி ஞாயிறுல கூட பொன்னாத்தா 8 மணிக்கு எழுந்து வரும் பொது ஆச்சியம்ம்மா என்னமோ பொன்னாத்தா 5 வயசு பிள்ளை மாதிரி ரெடியா தேநீர் போட்டு வச்சுருப்பாங்க ....எனக்குன்னா கோபம் கோபமா வரும்.

வீட்ல வேலைக்காரி வர்றதே பெரிய விஷயம்...வேலைக்காரி பாவமேன்னு அவங்க வர முன்னாடி இவங்க எல்லா வேலையும் முடிச்சு வச்சுட்டு வேலைக்கார அக்காக்கு சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கும்

இவ்ளோ பண்ற ஆச்சியம்மாக்கு சோர்வே இருக்காதா.....பொன்னாத்தா கூட சொல்லும்...மத்தியானம் இந்த அகராதி புடிச்சவ துங்கும் பொது நீங்களும் துங்கலாம்லன்னு ....ஒரு நாளும் தூங்க மாட்டாங்க

ஆச்சியம்மாக்குன்னு எந்த ஒரு தனிப்பட்ட ஆசை கிடையாது....பொன்னாத்தா இந்த அளவுக்கு தைரியமா ஊர் சுத்துது,[ ரொம்பவே] நிறைய படிச்சுருக்கு [ என்னமோ அது தான் சொல்லுது] ..அப்டி இப்டின்னு இன்னும் சில பல திறமைகளை வளத்துருக்குன்னா அதுக்கேல்லாமே ஆச்சியம்மா குடுத்த ஊக்கம் தானாம்.

எல்லாரும் நான் ரொம்ப செட்டை செய்யுறேன்னு சொன்னாலும் ஆச்சியம்மா மட்டும் என்னை வய்யவே வைய்யாது....சில நேரம் என்னை வஞ்சதுக்காக பொன்னாத்தா வாங்கி கட்டிக்கும்..

இன்னும் கொஞ்ச நான் கழிச்சு நான் குழந்தைகள் காப்பகத்துக்கு போகட்டும்னு சொன்னா நான் அழுறேனோ இல்லியோ ஆச்சியம்மா கண்ணுல தண்ணி பார்க்கலாம்...

இப்டி இருக்குற ஆச்சியம்மவை விட வேற யாரை எனக்கு பிடிக்கும் சொல்லுங்க?

நான் தினமும் சாமி கும்பிடும் பொது சொல்றது.....ஆமி....மாயம்ம்மா .....ஐய்யப்பா ..

என்ன அர்த்தம்னு புரியலியா?...சாமியே...ஆத்தா மாரியாத்தா, அங்காள பரமேஸ்வரி ...அய்யப்பா சாமியே... எப்போவும் எங்க ஆச்சியம்மா என் கூடவே இருக்கணும்....எனக்கு புது சட்டை, மிட்டாய் எல்லாம் வேண்டாம்...ஆச்சியம்மா தான் வேணும்

நான் ஊரெல்லாம் சுத்தினாலும் ராத்திரி ஆச்சியம்மா பக்கத்துல படுத்தா தான் துங்குவேன்னு சொல்லுவேன்...எதுக்கு தெரியுமா...அப்படியாவது ஆச்சியம்மா கொஞ்சம் களைப்பாருவங்களேன்னு தான்.

சரி என் பட்டியல்ல இருக்குற இன்னும் கொஞ்ச பேர்.

அப்பா.- ஐயோ அப்பான்னாலே ஆசை தான்...அப்பா என்னை கூப்பிடுரதே அம்புட்டு அழகா இருக்கும்/..அப்பா கூட விளையாட எனக்கு கொள்ளை ஆசை.

ஐஷு - என்னோட அக்கா...இவளும் என்னை மாதிரி வாயாடி....கொஞ்சம் களிமண் குடுத்தா அம்புட்டு அழ்கா பொம்மைகள் செஞ்சுடுவா

அணு- என்னோட பெரிய அக்கா - எல்லார் கிட்டயும் சமத்துன்னு பேரு வாங்கி ஐஷூக்கு அடி வாங்கி குடுப்பா. வீணை வாசிச்சுட்டே இருந்தான்னா நான் கேட்டுட்டே இருப்பேன்

இன்னும் நிறைய இருக்கு...அதுக்கு தனி பதிவு போடுறேன்....

நான் இங்கே தொடர அழைப்பது பப்புக்கு புடிச்ச மனுஷங்களை பற்றி சொல்ல
முல்லை அத்தையை.....அத்தை நீங்களும் பொன்னாத்தா மாதிரி முரண்டு பிடிக்க கூடாது....

அன்பு முத்தங்களுடன்
உங்கள் நிலா

Feb 5, 2009

அகராதி புடிச்சவ!!



அம்மா ஊர் பக்கம் திமிர் புடிச்சவங்கள தான் அகராதி புடிச்சவன்னு சொல்லுவாங்க....அப்படின்னா நான் திமிர் புடிச்சவலான்னு கேக்குறேங்களா ?..எனக்கு என்னமோ அப்டி எல்லாம் இல்லன்னு தான் தோனுது...
ஆனா பார்த்திங்கன்னா எனக்குன்னு ஒரு அகராதி இருக்கு...அது நிறைய பேருக்கு புரிய மாட்டேங்குது..
எல்லாரும் கூகிள், விக்கி-ன்னு நான் சொல்ற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தேடி போறிங்களாம்...அம்மா ஒரே வியாக்யானம்.. அதுனால சரி நிலா அகராதி ஒன்னு போடலாமேன்னு வந்தேன்...


அம்மா- அம்மா { சும்மா முதல்ல அம்மா-நு ஆரம்பிக்கலாமேன்னு தான் ..ஹி ஹி }
காக்கா - காக்கா
ன்னி - தண்ணி
புக்கா - புடிச்சா [ கண் மூடிட்டு திறக்கும் பொது புடிச்சா சொல்றது ]
பவ்பவ் - நாய் குட்டி
சீஸ் - சீசர் [ நாய் குட்டி ]
நெஙா - வேணாம்
னாணம் - வேணாம்
ரோரோ - தாலாட்டு
அய்ஸ் - அய்ஷ்வர்யா
சியா -அய்ஷ்வர்யா
தியா-திவ்யா
அகா -அக்கா
ன்னா-அண்ணா
மாமா-மாமா [ அட உங்க ஊர்ர்லேயும் இப்டி தான் சொல்லுவீங்களா ]
ஆபிஸ் - ஆஃப்பிஸ
ஆப்பி -ஆப்பிள்
மம்மம் -சாப்பாடு
அம்மி - யம்மி - Yummy
தஷ்நி - தர்ஷினி
கேயட் = கேர்ரட்
அக் - டக் [ Duck]
தக்ளி - தக்காளி
முங்க்கா - முருங்கைக்காய
ஆமி -சாமி
அய்யப்பா -ஐயப்பா
மாயம்மா -மாரியம்மா
டொண்டாய்ன் டொண்டாய்ன் - ஆடி ஆடி நடக்கும் போது வீட்ல சொல்றது
பந்தியா பந்தியா -பயந்தியா பயந்தியா
வ்வ்வா - வா
ஸ் ஸ் -. இரண்டு பேர் கை பிடித்து சுற்றி சுற்றி விளையாடும் விளையாட்டு
வன், தீ - ஒன், டூ , த்ரி
சா , பூ, தி - சாட் , பூட், தி
ஈய - இல்லை
அட்டிங் - அட நல்ல இருக்கே...
வாவ்வ்வ்வ்வ்- Wow
ன்னு - புண்
உம்ம்மா - Kiss
நியா - நிலா

நாயான் - நான் தான்
பிஸ் - பிஷ்
பாவு - பால் [குடிக்குற பால்]
பா - பால் பந்து
இத்தி - இட்லி
த்தொசை -தோசை
சாக்கி - சாக்லேட்
பாட்டி - பாட்டி

நியா நியா வா வா - நிலா நிலா ஓடி வா


பா பா ஷிப் - பா பா பிளாக் ஷீப்


அம்மா அம்மா வா வா - அம்மா இங்கே வா வா


கடைசியா என்னோட டைப்பிஸ்ட் சொன்னது : "அடியே வாயாடி இருந்தாலும் ஒன்னேகால் வயசுக்கு நீ ரொம்ப ஓவரா பேசுற...அவ்ளோ தான் நான் சொல்வேன்..."

சரி அத்தை மாமா, இனிமேலாவது அம்மா கிட்ட போயி வியாக்யானம் சொல்ல மாட்டிங்கன்னு நம்புறேன்.ஒரு வேலை நான் சொல்றது புரியலன்னா நான் சின்ன புள்ளைன்னு கூச்சப்படாம என் கிட்ட கேளுங்க...
ஆசை கிச்சாக்களுடன் [ அகராதில விட்டு போச்சு....கிச்சா - முத்தம் ]
உங்கள் நிலா