Apr 4, 2009

வரையலாம் வாங்க - பாகம் 1


எனக்கு கொஞ்ச நாளா எழுதுறதுக்கு ஒரு விஷயமும் கிடைக்கல...அப்டியே ஏதாவது யோசிச்சு எழுதினாலும் ஒரு நாலு பாசக்கார மாமாக்கள் மட்டுமே வர்றாங்களே தவிர, எந்த அக்காவும் , தம்பியும் என்னைக் கண்டுக்கறதே இல்லை.. அதுனால தான் இந்த முயற்சி....

எங்கம்மாவுக்கே ஓவியம் சொல்லிக் கொடுத்தது நான் தான்...சரி எனக்கு தெரிஞ்ச திறமை அழிஞ்சு போகக் கூடாதேன்னு உங்களுக்கு சொல்லித் தர வந்தேன்...

சரி பாடத்துக்கு போவோமா...எல்லாரும் பென்சில் , பேப்பர் எடுத்துக்கோங்க...அழி ரப்பர் யாரும் தொடக் கூடாது..அழிக்காம வரைய கத்துக்கணும்....யாராவது ரப்பர் வச்சுருக்குறது பார்த்தேன், அப்புறம் அடிஸ்கேல் வச்சு கைல ..அடிப்பேன்

முதல்ல, இது மாதிரி வரைங்க...ரெண்டு கோடு உயரவாக்குல போட்டுகோங்க..அப்புறம் அதுல இருந்து நாலு கிளை வரையனும்....



போட்டாச்சா?பரவா இல்லியே..சொன்ன உடனே கற்பூரம் மாதிரி பிடிச்சுக்கிட்டேங்களே..

ஜமால் மாமா, கைல என்ன? ரப்பர் தானே...அப்பவே என்ன சொன்னேன்....அழிச்சு அழிச்சு பேப்பர் எல்லாம் ஒரே கரி ..ரெண்டு கோடு போடுறதுக்குள்ளே இப்படியா..ஐயோ ஐயோ ..

சரி இப்போ மரத்தோட கிளை எல்லாம் போட்டாச்சு..அடுத்து என்ன போடணும்?ஆதவா மாமா நீ சொல்லுங்க...
ஆதவா : நிலா பாப்பா கிளி போடனும்.. :
நிலா : மக்கு மக்கு....கிளை போட்டப்புறம் தான் இலை போடணும்.இலை இல்லாத மரத்துல இலவு காக்க கிளி கூட வராது...வவ்வால் தான் வரும்...
ஆதவா : அவ்வவவ் .....


எல்லாரும் குட்டி குட்டி மேகம் வரையுற மாதிரி இலைக் கொத்து போடுங்க பார்ப்போம் ..


ராசுக்குட்டி மாமா அழகா போட்டு இருக்கீங்களே..ஆதவ் பாப்பாக்கு இத சொல்லித் தரனும் சரியா ..

சரி அவ்ளோ தான்...வரஞ்சு முடிச்சாச்சு ..இனிமே வர்ணம் தீட்டனும்...வர்ணம் ஒழுங்கா கலைஞ்சு படம் முழுசும் பரவணும்னா, எந்த இடத்துல வர்ணம் தீட்ட போறீங்களோ, அந்த இடத்துல முதல்ல வெறும் பிரஷ்ல தண்ணி வச்சு தடவனும்..தண்ணி இருக்குற இடத்துல இப்போ வர்ணத்தை வச்சோம்னா , அழகா ஒரே சீரா பரவும்.வெளிறிய நிறங்களை முதல்ல போடுங்க....அது காய முன்னாடி அதை விட சற்று அடர்ந்த நிறத்தை ஓரத்தில இருந்து பரப்ப ஆரம்பிங்க




எங்க எல்லாரும் காட்டுங்க ..
நசரேயன் உள்ளே நுழைகிறார் ..

நிலா : ஏன் மாமா, கல்லூரி வரைக்கும் எல்லா வகுப்புக்கும் லேட்டா தான் போனீங்க...இப்போவும் இப்டியா...கடவுளே...பெருமாளே ..அய்யப்பா

நிலா : இந்த வகுப்பு முடியுற வரைக்கும் முட்டி போடுங்க ...


நசரேயன் ஏண்டா வந்தோம்னு தலைல அடிச்சுக்கிட்டு முட்டி போட்டு தலை குனிஞ்சு நிக்குறார்


ஜமால் மாமா எங்க காட்டுங்க பார்ப்போம்...அடக் கடவுளே இன்னும் முதல்ல போட சொன்ன ரெண்டு நெட்டு கோடு போடலியா ...
வேத்தியன் மாமா , நல்லா இருக்கு..நான் வரைய சொன்னது மரம்...நீங்க வரஞ்சுருக்குறது என்னதுன்னே எனக்கு தெரியல ..
மத்த எல்லாரும் நல்லா பண்ணிருக்கீங்க..

சரி...இப்போ மரம் வரஞ்சாச்சு ..தனிக் காட்டு மரமா வேணும்னா இப்டியே விட்ரலாம்..இல்லை, நம்ம பதிவர் உலகம் மாதிரி ஒரு அழகான சோலை உருவாக்கனும்னா எல்லாரும் அப்டியே அவங்க அவங்க இடத்துல உக்கார்ந்து நான் பண்றதை பாருங்க.....

வானம் போட்டு, மேகம் போட்டு, அதுல ரெண்டு கிளி போட்டு ....[ யார் அது என் கிளியை காக்கான்னு சொல்றது ..அடிப்பேன் ][தேவா பம்முகிறார் ]
மின் முகம் விஜய்.: நிலா பாப்பா இன்னும் என்ன எல்லாம் போடப் போற?...ஆத்தா வையும் வீட்டுக்கு போனும்...சீக்கிரம் முடி...
நிலா : விஜய் மாமா.. நான் நெட்டுக்கா அடிஸ்கேல் இல்லாம கோடு போடுற வரைக்கும் 100 தடவை போட சொன்னேனே..போட்டீங்களா ...?

மின்முகம் விஜய் வாயை ஸிப்பிடுவது தெரிகிறது
அப்புறம் கீழ மண்ணு போடனும்னா மண்ணு, புல்லு போடனும்னா புல்லு..
இவ்ளோ தான்...முடிஞ்சு போச்ச்சு


எல்லாரும் அடுத்த வகுப்புக்கு வரும் போது இதை முடிச்சுட்டு வரணும் ....சரியா ?
அடுத்த வகுப்புக்கு வரும் போது , எல்லாரும் அரை கால் டவுசர் போட்டு வாங்க...அப்போ தான் முட்டில அடிக்க வசதியா இருக்கும்...

வர்ர்ட்டா


உங்கள் அன்பு [!] நிலா

21 comments:

  1. அடடடா... அழகு அழகு... நிலா பாப்பா கிட்ட வரைய கத்துக்கறதுக்கு கொடுத்து வைச்சுருக்கனுமே... கண்டிப்பா கத்துக்கறோம்... கொஞ்சம் மெதுவா தான் கத்துக்குவோம்... அதுனால இதே வேகத்துல சொல்லி குடுங்க... கண்டிப்பா ஆதவ் அண்ணாக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். ரொம்ப நன்றி நிலா பாப்பா..

    ReplyDelete
  2. ஆத்தா.... பின்னூட்ட முறைய பழையபடி மாத்துங்க!!!

    இது ஒரு நல்ல முயற்சி!! ஆனா ரொம்ப வேகமா போறீங்க!!! அப்பறம் முதல் பாடத்திலயே கலர்லாம் கொடுத்து, அதுவும் Gradation லாம் கொடுத்திருக்கீங்க... நமமளுங்களுக்கு உடனே புரியாது!!

    நல்லா இருக்கு!!! நிலாவே வந்து சொல்லி கொடுக்கிறாப்ல!!

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க...
    கொஞ்சம் வேலையா இருக்கு...
    கண்டிப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல திரும்ப வரேன்...

    ReplyDelete
  4. வேத்தியன் மாமா , நல்லா இருக்கு..நான் வரைய சொன்னது மரம்...நீங்க வரஞ்சுருக்குறது என்னதுன்னே எனக்கு தெரியல ..//

    ஆஹா நிலாம்மா...
    இதுக்கு தான் நான் வரமாட்டேன்னு ஆரம்பத்துலயே சொன்னேன்...
    :-)

    இல்லைன்னு கூட்டிட்டுப்போய்ட்டு இப்பிடி என்னை தாளிக்கக்கூடாது ஓகேவா???
    :-)

    எனக்கு வரயத் தெரிஞ்ச ஒரே ஓவியம் நேர்கோடு தான்...
    :-)

    ReplyDelete
  5. என்னையும் ஒரு ஆளா மதிச்சு வரயச் சொன்னதுக்கு நன்றிம்மா...
    :-)

    ReplyDelete
  6. மரம் எல்லாம் வரயறதுக்கு எவ்வளவு கஷ்டமானதுன்னு உனக்கு தெரியுமா???

    ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு வரஞ்சத வச்சி சந்தோஷப்படாம...
    :-)))
    அடுத்த க்ளாஸ்ல என்ன வரயறது???
    செடியா?? கொடியா???
    :-)

    ReplyDelete
  7. :-) ஆகா...இது நல்ல ஐடியாவே இருக்கே! நீங்க டிராயிங் கிளாஸ் எடுத்தா நாங்க எல்லாம் ஆஜர்! :-)

    ReplyDelete
  8. //நிலா : மக்கு மக்கு....கிளை போட்டப்புறம் தான் இலை போடணும்.இலை இல்லாத மரத்துல இலவு காக்க கிளி கூட வராது...வவ்வால் தான் வரும்../

    ஹஹ்ஹ்ஹா!

    ReplyDelete
  9. நீங்க ஏன் தமிழ்மணத்துல சேர மாட்டேங்கறீங்க..நாங்களும் நல்ல பசங்கதான்..அங்கே வந்து ஐக்கியமாய்டுங்க மேடம்!

    ReplyDelete
  10. ராச்க்குட்டி மாமா, வேத்தியன் மாமா, ஆதவா மாமா, முல்லை அத்தை எல்லாருக்கும் அடுத்த வகுப்புல 10 மார்க் ஜாஸ்தியா போடுறேன்...சரியா

    ReplyDelete
  11. உள்ளேன் டீச்சர்

    ReplyDelete
  12. //நீங்க ஏன் தமிழ்மணத்துல சேர மாட்டேங்கறீங்க..//

    பதில் சொல்லணும் டீச்சர்

    ReplyDelete
  13. ஐக்கியமாயிட்டேன் தமிழ் மணத்துல

    ReplyDelete
  14. வாங்க வாங்க மொக்கையை தொடருங்க! :-)

    ReplyDelete
  15. வானம் போட்டு, மேகம் போட்டு, அதுல ரெண்டு கிளி போட்டு ....[ யார் அது என் கிளியை காக்கான்னு சொல்றது ..அடிப்பேன் ][தேவா பம்முகிறார் ]////

    தேவா விம்முகிறார்!!

    ReplyDelete
  16. எல்லாரும் டவுசர் போட்டு வரனுமா?
    நான் ஓவியம் வரைய வந்தாத்தான் அடங்குவீங்க எல்லாம்!! அடுத்த வாரம் என் ஓவியம் பாருங்க!! புள்ளைங்களா எல்லாம் மாமா பக்கம் வந்துடுங்க!!

    ReplyDelete
  17. இன்னிக்கும் வந்து விட்டேன்!! சும்மாதான்!!

    ReplyDelete
  18. gooddddd mooooorning tttttttteacher,
    maha.....
    i am present teacher..

    ReplyDelete
  19. super........
    ethail ennum thodarnthu nirayaa podunga romba nalla erukku.

    ReplyDelete
  20. rabber ellatti thevathai padam kuda kuttichaththaan mari erukkumeeeeeeeee...

    enna seirathu teacher

    ReplyDelete
  21. சாரி எங்களுக்கு எல்லாம் ரப்பர் பேக்டரியே தேவைப்படும்.
    ஏன்னா ரப்பர் இல்லாம நாங்க வரைஞ்சா ஏஞ்சல் படம் கூட குட்டிச்சாத்தான் மாதிரி இருக்கும்.

    ReplyDelete

முத்தமும், கொஞ்சலும்