Dec 4, 2008

கதை சொல்ல போறேன்


என்ன கதை சொல்ல போறேன்? எங்கம்மா எனக்கு எப்பவும் சொல்ற கதை சொல்ல போறேன்.


ஒரு ஊர்ல ஒரு ராஜாராணி இருந்தாங்களாம். அந்த ராஜா ராணிக்கு குட்டி பாப்பான்னா ரொம்ப பிடிக்குமாம். அதுனால அவங்க ரெண்டு பேரும் சாமி கிட்ட போயி சாமி சாமி எங்களுக்கு எப்போவும் சிரிச்சுக்கிட்டே இருக்குற ஒரு அழகான பாப்பா வேணும்னு வரம் கேட்டாங்களாம்.


சாமி .......ஆஹா இவங்கள பார்த்தா ரொம்ப நல்லவங்களா தெரியுதே. இவங்க கேட்ட வரத்தை இவங்களுக்கு குடுத்துருவோம். ஆனா எப்போவும் சிரிச்சுக்கிட்டே இருக்குற மாதிரின்னா எப்படி ? அப்டின்னு யோசிச்சுக்கிட்டே சாமி மேல பார்த்தாராம். அப்போ வானத்துல நிலா அழகா சிரிச்சுகிட்டு இருந்துச்சாம்.

உடனே சாமி ...ஹ்ம்ம்.. எனக்கு தெரிஞ்சு போச்சு ...இந்த ராஜா ராணிக்கு நான் இந்த அழகான நிலவு மாதிரி ஒரு அழகான குட்டி பாப்பா தர போறேன்னு முடிவு செஞ்சாராம்.
அப்புறம் அந்த ராஜா ராணிக்கு கொஞ்ச நாள்ல ஒரு நிலா....இல்ல இல்ல ..ஒரு பாப்பா பிறந்துச்சாம்.

அப்படி பிறந்ததுனால தான் எனக்கு நிலா-ன்னு பேர் வச்சாங்களாம்.

அப்பா இப்போவும் சொல்லுவாங்க..நான் ரெண்டு மாச பாப்பாவா இருக்கும் போதே அப்பா பார்த்து நல்லா பொக்கை வாய் தெரிய சிரிப்பேனாம்.

இது தான் எங்க அரச குடும்ப புகைப்படம்

எப்டி இருக்கு என்னோட பிறந்த புராணம் ?

4 comments:

  1. நிலாகுட்டி எப்படி இருக்கீங்க.

    // அப்படி பிறந்ததுனால தான் எனக்கு நிலா-ன்னு பேர் வச்சாங்களாம்.//

    ஆஹா நிலா புராணம் அருமை நிலாகுட்டி.
    இங்க எங்க ஈரோட்டிலும் ஒரு நிலா பாப்பா இருக்கு.

    அப்பப்போ வந்து கதை சொல்லுங்க.

    உங்க குடும்ப படம் சூப்பர்

    ReplyDelete
  2. நல்லா இருக்கு நிலா புராணம்
    அப்படியே
    சூரியன் மாதிரி ஒரு தம்பி பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Karthick mama...antha Erode- raja ranikku pirantha vaayaadi nila akka-va enakku nalla theriyum....

    antha nila akka kuda azhaga sirichukittu photo-kku pose kuduppa thane?

    ReplyDelete
  4. vaal paiyan mama, ungalukku yen vaal paiyannu per vacahnga?
    :o) ....vaaloda pirantehngala ?!!!

    ReplyDelete

முத்தமும், கொஞ்சலும்