Mar 26, 2009
Mar 23, 2009
எனக்கும் பிடித்தவை!
அப்பாவை அளவுக்கதிகமாய் பிடிக்கும்
அம்மாவை அளவாய் பிடிக்கும்
குட்டி அண்ணாக்களின் குறுகுறு பார்வை பிடிக்கும்
தொடத் துடிக்கும் அக்காவின் விரல்கள் பிடிக்கும்
வெந்நீர்க் குளியலில் தூங்கப் பிடிக்கும்
நீச்சல் தொட்டியில் நீந்தப் பிடிக்கும்
பால் இல்லா உலகம் பிடிக்கும்
பசியே எடுக்காத வயிறு மிகப் பிடிக்கும்
அம்மாவை அளவாய் பிடிக்கும்
குட்டி அண்ணாக்களின் குறுகுறு பார்வை பிடிக்கும்
தொடத் துடிக்கும் அக்காவின் விரல்கள் பிடிக்கும்
வெந்நீர்க் குளியலில் தூங்கப் பிடிக்கும்
நீச்சல் தொட்டியில் நீந்தப் பிடிக்கும்
பால் இல்லா உலகம் பிடிக்கும்
பசியே எடுக்காத வயிறு மிகப் பிடிக்கும்
அன்பாய் அள்ளிக் கொள்ளும் அத்தைகள் பிடிக்கும்
மிரட்சியாய் ஒதுங்கும் மாமாவின் மீசையும் பிடிக்கும்
கலர் கலராய் பறக்கும் கார்ட்டூன் பொம்மைகள் பிடிக்கும்
கனவில்லா உலகத்தில் கடவுளுடன் பேசிச் சிரிக்கப் பிடிக்கும்
அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்யப் பிடிக்கும்
அரட்டும் அம்மாவைக் கட்டிக் கொஞ்சப் பிடிக்கும்
தென்னை மரத் தென்றலில் கண்ணயரப் பிடிக்கும்
தெம்மாங்காய் தேனிசையாய் கேட்கும் தாலாட்டும் பிடிக்கும்
உண்ணாமல் உறங்காமல் ஊர் சுத்தப் பிடிக்கும்
உண்டி வில்லெடுத்து தண்ணீரை உலப்பப் பிடிக்கும்
அடுக்கி வைத்த பொம்மைகளைக் கலைக்கப் பிடிக்கும்
மடித்து வைத்த சலவைத் துணியை உலைக்க ரொம்பப் பிடிக்கும்
ஜதியில்லாமல் ஆடப் பிடிக்க்கும்
வார்த்தைகளில்லாமல் பாடப் பிடிக்க்கும்
அக்காவின் புத்தகம் படிக்கப் பிடிக்க்கும்
படித்தபின் அதைக் கிழிக்கவும் ரொம்பப் பிடிக்கும்
எல்லாம் பிடிக்கும் எதுவும் பிடிக்கும்
கவலை தெரியாமல் சோகம் புரியாமல்
குழந்தையாய் இருக்கவே என்றும் பிடிக்கும்
-இது படிக்குற உங்களையும் பிடிக்கும் -
அன்புடன்
நிலா
Mar 17, 2009
சுயநலவாதி
வேற யாரு ..நம்ம பொன்னாத்தா தான்....என்ன பண்றது நான் எழுதுற எல்லா பதிவுமே பொன்னாத்தாவை தாக்குற மாதிரி தான் வருது
பொன்னாத்தாவுக்கு எப்போவுமே "தன்னோடது" அப்டிங்குற விஷயம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும்...கேட்டா பொண்ணுங்களுக்கே இருக்குற ஒரு குணம் "possessiveness" அப்டின்னு peter விடுது
சரி அதுனால ஏன் சுயநலவாதின்னு சொல்றேன்னு யோசிக்குரீங்களா....நீங்க ரொம்ப அவசரக்குடுக்கையா இருக்கீங்களே..பொறுமையா இருக்கணும் சரியா?
நான் பொன்னாத்தா வயித்துக்குள்ள இருக்கும் போது நிறைய பேசும் பொன்னாத்தா....கேட்க கேட்க நல்லா இருக்கும்...பாட்டு மட்டும் பாடுறேன்னு ஆரம்பிச்சுட்டா தான் கொஞ்சம் ... இல்லை இல்லை ரொம்பவே கஷ்டம்...
இப்டியே நானும் பொன்னாத்தாவும் நாற்ப்பது வாரம் யாருக்கும் தெரியாம பேசிக்கிட்டோம்...40 வாரம் தான் முடிஞ்சு போச்சே....பிரசவம் ஆகணுமே..நல்ல படியா ஆகணுமேன்னு எல்லாரும் சாமி கும்பிட்டுட்டு இருக்கும் போது பொன்னாத்தா என்ன செஞ்சுச்சு தெரியுமா......"கடவுளே என் புள்ளை எனக்கு உள்ளாரையே இருக்கட்டும்.....எனக்கு மட்டும் சொந்தமா இருக்கட்டும்..வெளிய வர வேணாம்னு.."
எனக்கு அப்பாவை பார்க்கனும்னு ஆசை....ஆனா பொன்னாத்தா வெளிய விட மாட்டேங்குது.....என்ன பண்றதுன்னே தெரியலை.....
ஒரு நாலு நாள் பொறுத்து மறுபடி பொன்னாத்தா ...."கிளி கிளி....என் வயித்துக்குள்ள இருக்கும் போது மட்டும் தான் நீ எனக்கு மட்டும் சொந்தம்....வெளிய வந்துட்டான்னா எல்லாரும் உன் பாசத்தை பங்கு போட வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துடுவாங்க...அதுனால உள்ளேயே இறேன்" அப்டின்னு...
எனக்கு பாவமா போச்சு...சரின்னு இன்னும் ஒரு மூணு நாள் இருந்தேன்...ஆக மொத்தம் பொன்னாத்தா கூட 41வாரம் இருந்தாச்சு.....அப்புறமா நான் பெரிசா ஆயிட்டேனா...பொன்னாத்தா வயிறு பத்தலை....எவ்ளோ நேரம் குறுக்கிட்டே உக்காந்து இருக்குறது....முட்டி மோதி வெளிய வந்துட்டேன்
பொன்னாத்தா வலிக்குதுன்னு எல்லாம் புலம்பலை அப்பா கிட்ட....அய்யய்யோ எல்லாரும் சொந்தம் கொண்டாடுவாங்களேன்னு தான் பொலம்புச்சு......
என்னை முதல்ல அப்பா கிட்ட தான் குடுத்தாங்க.....அதுக்கே பொன்னாத்தாக்க்கு காண்டு தான்...
சரி ஏன் இப்போ பழைய கதை எல்லாம்னு கேக்குறீங்களா? ..பொன்னாத்தா மீண்டும் பிரசவம்னு ஒரு பதிவு போட்டிருக்கு....பிரசவம்னு சொன்னதும்....ஆத்தா தாயே நீ படுத்தின பாடெல்லாம் மறந்து போச்சான்னு ஒரு கேள்வி கேக்கலாமேன்னு தான்
உங்கள் அன்புக் கண்மணி
நிலா
Subscribe to:
Posts (Atom)