அப்பாவை அளவுக்கதிகமாய் பிடிக்கும்
அம்மாவை அளவாய் பிடிக்கும்
குட்டி அண்ணாக்களின் குறுகுறு பார்வை பிடிக்கும்
தொடத் துடிக்கும் அக்காவின் விரல்கள் பிடிக்கும்
வெந்நீர்க் குளியலில் தூங்கப் பிடிக்கும்
நீச்சல் தொட்டியில் நீந்தப் பிடிக்கும்
பால் இல்லா உலகம் பிடிக்கும்
பசியே எடுக்காத வயிறு மிகப் பிடிக்கும்
அம்மாவை அளவாய் பிடிக்கும்
குட்டி அண்ணாக்களின் குறுகுறு பார்வை பிடிக்கும்
தொடத் துடிக்கும் அக்காவின் விரல்கள் பிடிக்கும்
வெந்நீர்க் குளியலில் தூங்கப் பிடிக்கும்
நீச்சல் தொட்டியில் நீந்தப் பிடிக்கும்
பால் இல்லா உலகம் பிடிக்கும்
பசியே எடுக்காத வயிறு மிகப் பிடிக்கும்
அன்பாய் அள்ளிக் கொள்ளும் அத்தைகள் பிடிக்கும்
மிரட்சியாய் ஒதுங்கும் மாமாவின் மீசையும் பிடிக்கும்
கலர் கலராய் பறக்கும் கார்ட்டூன் பொம்மைகள் பிடிக்கும்
கனவில்லா உலகத்தில் கடவுளுடன் பேசிச் சிரிக்கப் பிடிக்கும்
அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்யப் பிடிக்கும்
அரட்டும் அம்மாவைக் கட்டிக் கொஞ்சப் பிடிக்கும்
தென்னை மரத் தென்றலில் கண்ணயரப் பிடிக்கும்
தெம்மாங்காய் தேனிசையாய் கேட்கும் தாலாட்டும் பிடிக்கும்
உண்ணாமல் உறங்காமல் ஊர் சுத்தப் பிடிக்கும்
உண்டி வில்லெடுத்து தண்ணீரை உலப்பப் பிடிக்கும்
அடுக்கி வைத்த பொம்மைகளைக் கலைக்கப் பிடிக்கும்
மடித்து வைத்த சலவைத் துணியை உலைக்க ரொம்பப் பிடிக்கும்
ஜதியில்லாமல் ஆடப் பிடிக்க்கும்
வார்த்தைகளில்லாமல் பாடப் பிடிக்க்கும்
அக்காவின் புத்தகம் படிக்கப் பிடிக்க்கும்
படித்தபின் அதைக் கிழிக்கவும் ரொம்பப் பிடிக்கும்
எல்லாம் பிடிக்கும் எதுவும் பிடிக்கும்
கவலை தெரியாமல் சோகம் புரியாமல்
குழந்தையாய் இருக்கவே என்றும் பிடிக்கும்
-இது படிக்குற உங்களையும் பிடிக்கும் -
அன்புடன்
நிலா
\\அப்பாவை அளவுக்கதிகமாய் பிடிக்கும்
ReplyDeleteஅம்மாவை அளவாய் பிடிக்கும்\\
ஹையா!
\அக்காவின் புத்தகம் படிக்கப் பிடிக்க்கும்
ReplyDeleteபடித்தபின் அதைக் கிழிக்கவும் ரொம்பப் பிடிக்கும்\\
ஆத்தாவும் அப்படித்தான் இருந்திருப்பாக
\-இது படிக்குற உங்களையும் பிடிக்கும் -
ReplyDeleteஅன்புடன்
நிலா\\
ஹை குட்டீஸ் எங்களுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்
சூப்பர் நிலா. உன் அம்மா-வ விட நல்லா எழுதி இருக்கே. எல்லா வரியும் நல்லா இருக்கு. இப்போ இந்த தூக்க கலக்கதுலயும் இந்த நாலு வரி எனக்கு ரொம்பவும் பிடிச்சு இருக்கு. really good job!
ReplyDelete//
அடுக்கி வைத்த பொம்மைகளைக் கலைக்கப் பிடிக்கும்
மடித்து வைத்த சலவைத் துணியை உலைக்க ரொம்பப் பிடிக்கும்
ஜதியில்லாமல் ஆடப் பிடிக்க்கும்
வார்த்தைகளில்லாமல் பாடப் பிடிக்க்கும்
//
அருமையோ அருமை நிலா குட்டி. இத்தனையும் பிடிக்கும்னு சொன்னா நிலா பாப்பாவை எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்... வாழ்க வளமுடன்.
ReplyDelete//எல்லாம் பிடிக்கும் எதுவும் பிடிக்கும்
ReplyDeleteகவலை தெரியாமல் சோகம் புரியாமல்
குழந்தையாய் இருக்கவே என்றும் பிடிக்கும்//
இதை சொன்ன உன்னையும் பிடிக்கும்
///உண்டி வில்லெடுத்து தண்ணீரை உலப்பப் பிடிக்கும்///
ReplyDeleteபிடிக்கிறது.. உங்கள் கவிதையும்!!!
குழந்தையின் பார்வையில். மழலையே எழுதிய பிஞ்சுக் கவிதைபோன்று!!!
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\அக்காவின் புத்தகம் படிக்கப் பிடிக்க்கும்
படித்தபின் அதைக் கிழிக்கவும் ரொம்பப் பிடிக்கும்\\
ஆத்தாவும் அப்படித்தான் இருந்திருப்பாக
////
ஜமால் மாமா சரியா சொன்னீக...இன்னிம் கிழி கிழின்னு கிழிச்சுக்குட்டே தான் இருக்காக
விஜய் மாமா [ மின்முகம்] நாடு ராத்திரில என் பதிவு படிச்சு பின்னூட்டம் போட்டதுனால, அடுத்த தடவை பார்க்கும் போது காத்துல பறக்குற முத்தம் தரேன்...சரியா
ReplyDeleteராசுக்குட்டி எனக்கு உங்களையும் பிடிக்கும்...அதோட ஆதவ் கைல இன்னும் இருக்குற வளையலும் பிடிக்கும் ..ஹி ஹி
ReplyDeleteநசரேயன் மாமா, ஆதவா மாமா, தங்கு [ Thanq]
ReplyDelete//இது படிக்குற உங்களையும் பிடிக்கும்//
ReplyDeleteநன்றிங்க!
superb ma
ReplyDeleteபோட்டோவுல இருக்கிறது நிலா பாப்பாவா?
ReplyDeleteசெம க்யூட்.. சுத்தி போடுங்க. :)
என் பெயரே பின்னூட்டமாக.. :)
ReplyDeletekavithai arumai.
ReplyDeletephotola erukka pappa yaaru.