வேற யாரு ..நம்ம பொன்னாத்தா தான்....என்ன பண்றது நான் எழுதுற எல்லா பதிவுமே பொன்னாத்தாவை தாக்குற மாதிரி தான் வருது
பொன்னாத்தாவுக்கு எப்போவுமே "தன்னோடது" அப்டிங்குற விஷயம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும்...கேட்டா பொண்ணுங்களுக்கே இருக்குற ஒரு குணம் "possessiveness" அப்டின்னு peter விடுது
சரி அதுனால ஏன் சுயநலவாதின்னு சொல்றேன்னு யோசிக்குரீங்களா....நீங்க ரொம்ப அவசரக்குடுக்கையா இருக்கீங்களே..பொறுமையா இருக்கணும் சரியா?
நான் பொன்னாத்தா வயித்துக்குள்ள இருக்கும் போது நிறைய பேசும் பொன்னாத்தா....கேட்க கேட்க நல்லா இருக்கும்...பாட்டு மட்டும் பாடுறேன்னு ஆரம்பிச்சுட்டா தான் கொஞ்சம் ... இல்லை இல்லை ரொம்பவே கஷ்டம்...
இப்டியே நானும் பொன்னாத்தாவும் நாற்ப்பது வாரம் யாருக்கும் தெரியாம பேசிக்கிட்டோம்...40 வாரம் தான் முடிஞ்சு போச்சே....பிரசவம் ஆகணுமே..நல்ல படியா ஆகணுமேன்னு எல்லாரும் சாமி கும்பிட்டுட்டு இருக்கும் போது பொன்னாத்தா என்ன செஞ்சுச்சு தெரியுமா......"கடவுளே என் புள்ளை எனக்கு உள்ளாரையே இருக்கட்டும்.....எனக்கு மட்டும் சொந்தமா இருக்கட்டும்..வெளிய வர வேணாம்னு.."
எனக்கு அப்பாவை பார்க்கனும்னு ஆசை....ஆனா பொன்னாத்தா வெளிய விட மாட்டேங்குது.....என்ன பண்றதுன்னே தெரியலை.....
ஒரு நாலு நாள் பொறுத்து மறுபடி பொன்னாத்தா ...."கிளி கிளி....என் வயித்துக்குள்ள இருக்கும் போது மட்டும் தான் நீ எனக்கு மட்டும் சொந்தம்....வெளிய வந்துட்டான்னா எல்லாரும் உன் பாசத்தை பங்கு போட வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துடுவாங்க...அதுனால உள்ளேயே இறேன்" அப்டின்னு...
எனக்கு பாவமா போச்சு...சரின்னு இன்னும் ஒரு மூணு நாள் இருந்தேன்...ஆக மொத்தம் பொன்னாத்தா கூட 41வாரம் இருந்தாச்சு.....அப்புறமா நான் பெரிசா ஆயிட்டேனா...பொன்னாத்தா வயிறு பத்தலை....எவ்ளோ நேரம் குறுக்கிட்டே உக்காந்து இருக்குறது....முட்டி மோதி வெளிய வந்துட்டேன்
பொன்னாத்தா வலிக்குதுன்னு எல்லாம் புலம்பலை அப்பா கிட்ட....அய்யய்யோ எல்லாரும் சொந்தம் கொண்டாடுவாங்களேன்னு தான் பொலம்புச்சு......
என்னை முதல்ல அப்பா கிட்ட தான் குடுத்தாங்க.....அதுக்கே பொன்னாத்தாக்க்கு காண்டு தான்...
சரி ஏன் இப்போ பழைய கதை எல்லாம்னு கேக்குறீங்களா? ..பொன்னாத்தா மீண்டும் பிரசவம்னு ஒரு பதிவு போட்டிருக்கு....பிரசவம்னு சொன்னதும்....ஆத்தா தாயே நீ படுத்தின பாடெல்லாம் மறந்து போச்சான்னு ஒரு கேள்வி கேக்கலாமேன்னு தான்
உங்கள் அன்புக் கண்மணி
நிலா
என்ன மொழிங்க இது
ReplyDeleteஎண்ண மொழி
ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க
ReplyDeleteமீண்டும் மீண்டும் படிக்கிறேன்
நல்லா இருக்கு ...
வாங்க ஜமால் மாமா...நலமா...குட்டி தம்பி நலமா
ReplyDeleteபொன்னாத்தா பதிவுக்கு அழைத்தால் இங்க வந்துருக்கேங்க...பொன்னாத்தா காண்டாக போகுது..ஹி ஹி
எனக்கொரு சந்தேகம்... யாருங்க அந்த பொன்னாத்தா???
ReplyDeleteஅப்பறம்.... பதிவு நல்லா இருந்தது!1 பொன்னாத்தா யாருன்னு யோசிச்சே படிச்சதில் ஒண்ணும் புடிபடலை!!! ஹி ஹி
///
ReplyDeleteசரி அதுனால ஏன் சுயநலவாதின்னு சொல்றேன்னு யோசிக்குரீங்களா....நீங்க ரொம்ப அவசரக்குடுக்கையா இருக்கீங்களே..பொறுமையா இருக்கணும் சரியா?
////
அப்புடியா???
////
ReplyDeleteபாட்டு மட்டும் பாடுறேன்னு ஆரம்பிச்சுட்டா தான் கொஞ்சம் ... இல்லை இல்லை ரொம்பவே கஷ்டம்...
////
ஹா ஹா ஹ்ஹா
ஆத்தா தாயே நீ படுத்தின பாடெல்லாம் மறந்து போச்சான்னு ஒரு கேள்வி கேக்கலாமேன்னு தான்
ReplyDelete////
அடடா சூப்பரா இருக்க்கு உங்கள் எழுத்தூநடை
நிலாக்குட்டி அது தம்பி இல்லேமே
ReplyDeleteதங்கச்சி சரியா!
பொன்னாத்த மேட்டர விடு என்கிட்ட
இன்று தான் follower ஆனேன் இனி பார்ப்போம்
நல்லாயிருக்கியாடா செல்லம்
உங்க அத்தையும் உன்ன கேட்டதா சொன்னாங்க சைட்ல ஹாஜரும் ‘ஹும் ம்ம் ‘ இது மாதிரி ஏதோ சவுண்ட் உட்டாங்க
நன்றி நசரேயன் மாமா
ReplyDelete-----------------------
நன்றி ஆதவ் மாமா [ பொன்னாத்தா என்னைப் பெத்த ஆத்தா]
-------------------------
பிரபு மாமா வாங்க வாங்க....நன்றி நன்றி ...எல்லாம் என் கற்ப்பனை தான்.....டைப் பண்றது மாத்திரம் தான் பொன்னாத்தா
----------------------------
ஜமால் மாமா ம.ஹ்ம்ம்...அப்டினா ஏதோ சவுண்டு இல்லை...அதுக்கு நிறைய அர்த்தம் இருக்கு..புரியலன்னா என்கிட்டே சொல்லுங்க....நான் என் அகராதி பாத்து சொல்றேன்.
யாருங்க பொன்னாத்தா? ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே.
ReplyDeletehttp://mahawebsite.blogspot.com/