Jan 21, 2009

பொங்கல் தெரு விழா.


எல்லாருக்கும் வணக்கம் .....புத்தாண்டு வாழ்த்துக்களும் கூட
ஊர் பக்கம் போயிருந்ததால நம்ம தச்சு பொறியாளர் ஒத்துழைப்பு குடுக்கல.....

என்ன செஞ்சீங்க அத்தை மாமா பொங்கலுக்கு.....கரும்பு சாப்பிட்டீங்களா? பனங் கிழங்கு சாப்பிட்டீங்களா?நான் இப்போ தான் முதல் முறையா கரும்பு சாப்பிடுறேன் ...யம்மாடியோவ் ...எம்புட்டு இனிப்பு......இப்போ தான் புரியுது அம்மா ஏன் என்னை கரும்பு சக்கரையேநு கூப்பிடுறாங்கன்னு ....அம்புட்டு இனிப்பாம் நான்.
சரி பொங்கலுக்கு ஒரு முக்கியமான விஷயம் நடந்துச்சு தெரியுமா.....எங்க தெருல நடந்த மாறு வேட போட்டில நான் கலந்துகிட்டு முதல் பரிசு வாங்கினேனாக்கும்.
அப்படி என்ன வேஷம் போட்ட கண்ணு? அப்டின்னு கேக்குறேங்களா ?
சொல்றேன் சொல்றேன் ..... ஸ்ட்ராபெர்ரி ....ஆமா....



சரி சும்மா வேஷம் மட்டும் போட்டா போதுமா.....மேடைல போயி எதுவும் பேச வேணாமா?
சரின்னு அம்மா என்னை கட்டாயப்படுத்தி உக்கார வச்சு ஒரு நாலு விஷயம் சொன்னாங்க...என்ன எல்லாம்?
-ஸ்ட்ரா பெர்ரில மட்டும் தான் விதை வெளிய இருக்குமாம் [ அட ...ஆமா ]

-வசந்த காலத்துல முதல்ல முளைக்குற பழம் ஸ்ட்ரா பெர்ரி [ அதான் எனக்கு தெரியுமே!]

மாமா உனக்கு தெரியுமா? எங்க வீட்ல ஸ்ட்ரா பெர்ரி செடி இருக்கே...அதுல ஒவ்வொரு வசந்த காலத்துலையும் நிறைய ஸ்ட்ரா பெர்ரி முளைக்குமே....கடைல வாங்குற ஸ்ட்ரா பெர்ரி விட எங்க வீட்ல முளைக்குற ஸ்ட்ரா பெர்ரி நல்லா இனிப்பா இருக்கும்...

சரி சரி.... அம்மா வேற என்ன சொல்ல சொன்னாங்க

-ஸ்ட்ராபெர்ரி ரோஜா குடும்பத்தை சேர்ந்த வகையாம் ....[ஏன்? அதுவும் அழகா இருக்குறதுனாலயா?.....அம்மா ஷ்ஷ் சொல்லிட்டாங்க]

-ஸ்ட்ராபெர்ரி நிஜமான பழ வகையை சேர்ந்தது இல்லியாம். [ அதுக்கு அம்மா சொன்ன காரணம் எனக்கு புரியல ]
அம்புட்டு தான்....
எல்லாம் நல்லா மனசுல போட்டுகிட்டேன். சரி மேடைல ஏறினதும் சொன்னேனா ?என்ன அத்தை நீங்க ...என்னால எப்டி சொல்ல முடியும்...எனக்கு தான் பேச தெரியாதே.....ஹி ஹி....

சரி எதுக்கு தான் பரிசு குடுத்தாங்க....இவ்ளோ குட்டி பொண்ணா இருந்துக்கிட்டு மேடை ஏறி அழாம சிரிச்சுக்கிட்டு நின்னதால தான்.....

என்ன சரி தானே... ?
சீக்கிரம் அடுத்த பதிவோட வரேன்
உங்கள்
-ஸ்ட்ரா பெர்ரி -

4 comments:

  1. அழகா இருக்கு ஸ்ட்ரா பெர்ரி
    பரிசு வாங்குனதுக்கு ட்ரீட் எங்க
    நம்ம டைப்பிஸ்டுகிட்ட சொல்லுங்க இன்னும் சில படங்கள பதிவுல போடச் சொல்லுங்க

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எல்லாம் நல்லா மனசுல போட்டுகிட்டேன். சரி மேடைல ஏறினதும் சொன்னேனா ?என்ன அத்தை நீங்க ...என்னால எப்டி சொல்ல முடியும்...எனக்கு தான் பேச தெரியாதே.....ஹி ஹி....

    சரி எதுக்கு தான் பரிசு குடுத்தாங்க....இவ்ளோ குட்டி பொண்ணா இருந்துக்கிட்டு மேடை ஏறி அழாம சிரிச்சுக்கிட்டு நின்னதால தான்.....
    ///

    உங்க குழந்தைக்கு எங்கள் அன்பை சொல்லவும்..

    என் ப்ளாகில் அறிவியல்
    பதிவு உங்கள் கருத்துரைக்காக
    காத்திருக்கிறது..
    தேவா..

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஸ்ட்ராபெர்ரிக் குட்டி! இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகள்! ஸ்பெஷலா உங்க அம்மாவுக்கும்!!

    ReplyDelete
  4. என்னன்ங்க
    ஆளையே காணோம்>>>>>>..

    ReplyDelete

முத்தமும், கொஞ்சலும்