Jan 24, 2009

கிருஷ்ணா! கிருஷ்ணா!


உங்க எல்லாருக்கும் நீங்க எப்டி பிறந்தீங்கன்னு உங்க அம்மா சொல்லிருப்பாங்க...ஆனா கிருஷ்ணர் சாமி எப்டி பிறந்தார்னு உங்கம்மா சொன்னாங்களா? எங்க அம்மா சொன்ன கதை நான் சொல்லட்டுமா ?
ஒரு ஊர்ல உக்ரேசன் என்கிற ராஜாக்கு தேவகி, ஹம்சன் அப்டின்ன்னு 2 பிள்ளைங்க இருந்தாங்களாம். ஹம்சன் ரொம்ப ரொம்ப கெட்ட பிள்ளையாம். ஹம்சன் பெரிய பிள்ளையா வளர்ந்த உடனே அவங்க அப்பாவையே ஜெயில்ல போட்டுட்டு ராஜா ஆகிட்டராம்.

கொஞ்ச நாள்ல தேவகி அம்மாவுக்கும் வாசுதேவர்க்கும் கல்யாணம் ஆச்சாம். அவங்களுக்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல ஹம்சனுக்கு ஒரு அசரீரி கேட்டுச்சாம்.அந்த அசரீரி சொல்லுச்சாம் .." ஹே ஹம்சா உன் சகோதரிக்கு பிறக்க போற எட்டாவது பையன் உன்னை கொன்னு போடுவான்"....அப்டின்னு சொல்லுச்சாம்...

ஹம்சனுக்கு ரொம்ப கோவம் வந்து தேவகியையும், வாசுதேவரையும் ஜெயில்ல தூக்கி போட்டனாம். எப்போ எல்லாம் அவங்களுக்கு குழந்தை பிறக்குதோ அப்போ எல்லாம் ஹம்சன் ஜெயிலுக்கு போயி குட்டி பாப்பா எல்லாரையும் கொன்னு போட்ருவானம்..
தேவகிக்கு எட்டாவது பாப்பா பிறக்க போகும் போது வாசுதேவரோட நண்பர் ராஜா நந்தாவோட மனைவி யசொதாவுக்கும் வயித்துக்குள்ள பாப்பா இருந்துச்சாம்.

தேவகிக்கு எட்டாவது குழந்தை நாடு ராத்திரில பிறந்துச்சாம். அது தான் நம்ம சாமி கிருஷ்ணா. கிருஷ்ணா பிறந்த அதே சமயம் யசொதாக்கு விஷ்ணு சாமி தங்கச்சி பாப்பாவா பிறந்தாராம்.

கிருஷ்ணர் பாப்பா பிறந்த உடனே ஒரு அசரீரி வாசுதேவர் கிட்ட சொல்லுச்சாம். " பாப்பாவை யமுனா நதி வழியா கொண்டு போயி யசோதா கிட்ட குடுத்துட்டு தங்கச்சி பாப்பாவை வாங்கிட்டு வந்துரு......யாருக்கும் குழந்தை பிறந்த விஷயம் தெரிய முன்னாடி ஜெயிலுக்கு திரும்பி வந்துடு" ன்னு




வாசுதேவர் உடனே கிருஷ்ணர் பாப்பாவை துக்கிட்டு ஜெயில் விட்டு கிளம்பும் போது ஜெயில் கதவு எல்லாம் திறந்து இருந்துச்சாம்....ஜெயில் காவலாளிகள் எல்லாரும் மயக்கத்துல இருந்தாங்களாம்; ...அவ்ளோ பெரிய யமுனா நதி வாசுதேவர் வந்ததும் ரெண்டா பிரிஞ்சு வழி விட்டுச்சாம்.; அவர் வேக வேகமா போயி கோகுலத்தில யசோதா வீட்ல கிருஷ்ணர் பாப்பாவை கட்டில்ல போட்டுட்டு தங்கச்சி பாப்பாவை துக்கிட்டு வந்துட்டாராம் .

ஜெயிலுக்கு வந்து தங்கச்சி பாப்பாவை தேவகி பக்கத்துல படுக்க வச்சதும் ஜெயில் கதவு எல்லாம் மூடிக்குச்சாம். காவலாளிகள் எல்லாரும் இப்போ முளிசுட்டாங்கலாம். பாப்பா அழுகை சத்தம் கேட்டு ஒரு காவலாளி வேகமா ஹம்சன் கிட்ட போயி சொல்லிட்டானாம்.

ஹம்சன் கோபமா பாப்பாவை கொல்றதுக்கு ஜெயிலுக்கு வந்தானாம்...தேவகி அழுதுக்கிட்டே கெஞ்சி கேட்டாங்களாம். .."ஹம்சா இது பொன் குழந்தை.....விட்டுடு : அப்டின்னு,,,,.ஹம்சன் தேவகியை தள்ளி விட்டுட்டு பாப்பாவை கைல எடுத்து தூக்கி வீசினானாம்....ஆனா நல்ல வேளை குட்டி பாப்பா கீழ விழலியாம்....ஆனா அப்டியே மேல போயி எட்டு கையோட துர்கா சாமியா மாறிடுச்சாம் ..துர்கா சாமி சொல்லுச்சாம் ...."ஹே ஹம்சா என்னை கொன்னா ஒன்னும் ஆகாது.....உன்னை கொள்ள போற கிருஷ்ணர் வேற இடத்துல இருக்குறார்" அப்டின்னு சொல்லிட்டு காணாம போயிடுச்சாம்.....

அந்த சமயத்துல கோகுலத்தில நந்த ராஜா நாடே கோலாகலமா கிருஷ்ணர் பிறந்ததை கொண்டாடுனாங்கலாம்.



இப்போ தெரியுதா கிருஷ்ணர் எவ்ளோ பெரிய சாமின்னு....நமக்கு எப்போயாவது ஹம்சன் மாதிரி எதுனா கஷ்டம் வந்துச்சுன்னா கண்ணை மூடிட்டு கிருஷ்ணா கிருஷ்ணா அப்டின்னு சொல்லிட்டே இருந்தோம்னா கிருஷ்ணர் வந்து நம்ம கஷ்டம் எல்லாத்தையும் போக வச்சுடுவார்....

சரியா?

3 comments:

  1. பாப்பா படங்கள்
    ரொம்ப
    அருமை!!
    பிகாஸா ஆல்பத்தில்
    போடவும்!!!

    ReplyDelete
  2. தூரிகைக்கும்
    துணிக்கும்
    இடையில்
    சிந்திக்கிடக்கும்
    வண்ண மை போல்


    அருமை...


    [நிலாவின் பதிவு பிடிக்கலியோ ?]///

    நிலாவின் பதிவுகளும்
    படமும்
    அருமை!
    நீங்கள்
    என் பின்னூட்டத்தை
    பார்க்கவில்லையா/

    தேவா..

    ReplyDelete
  3. வணக்கம் நான் ரம்யா,

    நான் வலைச்சரம் ஆசிரிராக கடந்த நான்கு நாட்களாக
    பணியாற்றி வருகிறேன்

    என் லிங்க்: http://ramya-willtolive.blogspot.com/

    நிலா அழகு,
    நிலாவை வலைச்சரத்தில்
    அறிமுகப் படுத்தி உள்ளேன்
    போய பார்க்கவும்

    வலைச்சரம்: லிங்க் இதுதான்: http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_05.html

    இனி அடிக்கடி உங்க
    பதிவிற்கு வருவேன்
    வேலை பாலு
    காரணமாக தாமதம்
    மன்னிக்கவும்,

    நிலாவிற்கு
    என் வாழ்த்துக்களும் ஆசிகளும்

    ReplyDelete

முத்தமும், கொஞ்சலும்