Feb 25, 2009

என்னை கவர்ந்த ஆத்மா -தொடர் பதிவு



அநியாயம் அநியாயம்

பொன்னாத்தா என்னை தொடர் பதிவு போட சொல்லி ஒரு வாரத்துக்கும் மேல ஆகுது....நான் தயாரா தான் இருந்தேன். ஆனா என்னை கவர்ந்த ஆத்மா யாருன்னு நான் அறிக்கை வெளியிட்டதும் பொன்னாத்தா ஒத்துழைப்பு குடுக்க மறுத்துட்டாங்க.

பதிவு படிச்சு முடிச்சுட்டு நீங்களே ஒரு பஞ்சாயத்து வைங்க.
என்னை தொடர் பதிவுல இழுத்ததுக்கு காரணமே என்னை பெத்த ஆத்தாவுக்கு நான் அவீகள தான் சொல்லுவேன்னு நினைப்பு..


ஹ்ம்ம்...நான் உலகத்துல எம்புட்டு பேரை சந்திக்குறேன்..பேசுறேன்...பழகுறேன்...என்னை கேக்காம எப்டி முடிவு செய்யலாம்.

சரி பொன்னாத்தாவை அப்புறம் சமாளிச்சுக்கலாம்.

எனக்கு நிறைய பேரை பிடிக்கும்....பொன்னத்தாவையும் பிடிக்கும். அப்புறம் அப்பா, ஜெயாம்மா, ஐஷு, அணு, எல்லா தாத்தாவும், எல்லா ஆச்சியும்....

இருந்தாலும் எனக்கு எங்க ஆச்சியம்மன்னா உசிரு....ஆச்சியம்மா யாருன்னா பொன்னத்தாவோட அம்மா.
நான் முதல்ல ஆச்சியம்மவை நான் 4 மாச குழந்தையா இருக்கும் பொது தான் பார்த்தேன்...அப்போ இருந்து இப்போ வரைக்கும் நாங்க ரெண்டு பெரும் பிரிஞ்சதே இல்ல.....


ஆச்சியம்மவை பார்த்த அதிசயமா இருக்கும்...எப்போ பார்த்தாலும் வேலை செஞ்சுட்டே இருப்பாங்க.....பொன்னாத்தா கூட இருந்தாலும் சரி ஜெயா அம்மா [பொன்னத்தாவோட அக்கா] கூட இருந்தாலும் சரி ..எல்லா வேலையும் ஆச்சியம்மா தான் பார்ப்பாங்க...சனி ஞாயிறுல கூட பொன்னாத்தா 8 மணிக்கு எழுந்து வரும் பொது ஆச்சியம்ம்மா என்னமோ பொன்னாத்தா 5 வயசு பிள்ளை மாதிரி ரெடியா தேநீர் போட்டு வச்சுருப்பாங்க ....எனக்குன்னா கோபம் கோபமா வரும்.

வீட்ல வேலைக்காரி வர்றதே பெரிய விஷயம்...வேலைக்காரி பாவமேன்னு அவங்க வர முன்னாடி இவங்க எல்லா வேலையும் முடிச்சு வச்சுட்டு வேலைக்கார அக்காக்கு சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கும்

இவ்ளோ பண்ற ஆச்சியம்மாக்கு சோர்வே இருக்காதா.....பொன்னாத்தா கூட சொல்லும்...மத்தியானம் இந்த அகராதி புடிச்சவ துங்கும் பொது நீங்களும் துங்கலாம்லன்னு ....ஒரு நாளும் தூங்க மாட்டாங்க

ஆச்சியம்மாக்குன்னு எந்த ஒரு தனிப்பட்ட ஆசை கிடையாது....பொன்னாத்தா இந்த அளவுக்கு தைரியமா ஊர் சுத்துது,[ ரொம்பவே] நிறைய படிச்சுருக்கு [ என்னமோ அது தான் சொல்லுது] ..அப்டி இப்டின்னு இன்னும் சில பல திறமைகளை வளத்துருக்குன்னா அதுக்கேல்லாமே ஆச்சியம்மா குடுத்த ஊக்கம் தானாம்.

எல்லாரும் நான் ரொம்ப செட்டை செய்யுறேன்னு சொன்னாலும் ஆச்சியம்மா மட்டும் என்னை வய்யவே வைய்யாது....சில நேரம் என்னை வஞ்சதுக்காக பொன்னாத்தா வாங்கி கட்டிக்கும்..

இன்னும் கொஞ்ச நான் கழிச்சு நான் குழந்தைகள் காப்பகத்துக்கு போகட்டும்னு சொன்னா நான் அழுறேனோ இல்லியோ ஆச்சியம்மா கண்ணுல தண்ணி பார்க்கலாம்...

இப்டி இருக்குற ஆச்சியம்மவை விட வேற யாரை எனக்கு பிடிக்கும் சொல்லுங்க?

நான் தினமும் சாமி கும்பிடும் பொது சொல்றது.....ஆமி....மாயம்ம்மா .....ஐய்யப்பா ..

என்ன அர்த்தம்னு புரியலியா?...சாமியே...ஆத்தா மாரியாத்தா, அங்காள பரமேஸ்வரி ...அய்யப்பா சாமியே... எப்போவும் எங்க ஆச்சியம்மா என் கூடவே இருக்கணும்....எனக்கு புது சட்டை, மிட்டாய் எல்லாம் வேண்டாம்...ஆச்சியம்மா தான் வேணும்

நான் ஊரெல்லாம் சுத்தினாலும் ராத்திரி ஆச்சியம்மா பக்கத்துல படுத்தா தான் துங்குவேன்னு சொல்லுவேன்...எதுக்கு தெரியுமா...அப்படியாவது ஆச்சியம்மா கொஞ்சம் களைப்பாருவங்களேன்னு தான்.

சரி என் பட்டியல்ல இருக்குற இன்னும் கொஞ்ச பேர்.

அப்பா.- ஐயோ அப்பான்னாலே ஆசை தான்...அப்பா என்னை கூப்பிடுரதே அம்புட்டு அழகா இருக்கும்/..அப்பா கூட விளையாட எனக்கு கொள்ளை ஆசை.

ஐஷு - என்னோட அக்கா...இவளும் என்னை மாதிரி வாயாடி....கொஞ்சம் களிமண் குடுத்தா அம்புட்டு அழ்கா பொம்மைகள் செஞ்சுடுவா

அணு- என்னோட பெரிய அக்கா - எல்லார் கிட்டயும் சமத்துன்னு பேரு வாங்கி ஐஷூக்கு அடி வாங்கி குடுப்பா. வீணை வாசிச்சுட்டே இருந்தான்னா நான் கேட்டுட்டே இருப்பேன்

இன்னும் நிறைய இருக்கு...அதுக்கு தனி பதிவு போடுறேன்....

நான் இங்கே தொடர அழைப்பது பப்புக்கு புடிச்ச மனுஷங்களை பற்றி சொல்ல
முல்லை அத்தையை.....அத்தை நீங்களும் பொன்னாத்தா மாதிரி முரண்டு பிடிக்க கூடாது....

அன்பு முத்தங்களுடன்
உங்கள் நிலா

Feb 5, 2009

அகராதி புடிச்சவ!!



அம்மா ஊர் பக்கம் திமிர் புடிச்சவங்கள தான் அகராதி புடிச்சவன்னு சொல்லுவாங்க....அப்படின்னா நான் திமிர் புடிச்சவலான்னு கேக்குறேங்களா ?..எனக்கு என்னமோ அப்டி எல்லாம் இல்லன்னு தான் தோனுது...
ஆனா பார்த்திங்கன்னா எனக்குன்னு ஒரு அகராதி இருக்கு...அது நிறைய பேருக்கு புரிய மாட்டேங்குது..
எல்லாரும் கூகிள், விக்கி-ன்னு நான் சொல்ற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தேடி போறிங்களாம்...அம்மா ஒரே வியாக்யானம்.. அதுனால சரி நிலா அகராதி ஒன்னு போடலாமேன்னு வந்தேன்...


அம்மா- அம்மா { சும்மா முதல்ல அம்மா-நு ஆரம்பிக்கலாமேன்னு தான் ..ஹி ஹி }
காக்கா - காக்கா
ன்னி - தண்ணி
புக்கா - புடிச்சா [ கண் மூடிட்டு திறக்கும் பொது புடிச்சா சொல்றது ]
பவ்பவ் - நாய் குட்டி
சீஸ் - சீசர் [ நாய் குட்டி ]
நெஙா - வேணாம்
னாணம் - வேணாம்
ரோரோ - தாலாட்டு
அய்ஸ் - அய்ஷ்வர்யா
சியா -அய்ஷ்வர்யா
தியா-திவ்யா
அகா -அக்கா
ன்னா-அண்ணா
மாமா-மாமா [ அட உங்க ஊர்ர்லேயும் இப்டி தான் சொல்லுவீங்களா ]
ஆபிஸ் - ஆஃப்பிஸ
ஆப்பி -ஆப்பிள்
மம்மம் -சாப்பாடு
அம்மி - யம்மி - Yummy
தஷ்நி - தர்ஷினி
கேயட் = கேர்ரட்
அக் - டக் [ Duck]
தக்ளி - தக்காளி
முங்க்கா - முருங்கைக்காய
ஆமி -சாமி
அய்யப்பா -ஐயப்பா
மாயம்மா -மாரியம்மா
டொண்டாய்ன் டொண்டாய்ன் - ஆடி ஆடி நடக்கும் போது வீட்ல சொல்றது
பந்தியா பந்தியா -பயந்தியா பயந்தியா
வ்வ்வா - வா
ஸ் ஸ் -. இரண்டு பேர் கை பிடித்து சுற்றி சுற்றி விளையாடும் விளையாட்டு
வன், தீ - ஒன், டூ , த்ரி
சா , பூ, தி - சாட் , பூட், தி
ஈய - இல்லை
அட்டிங் - அட நல்ல இருக்கே...
வாவ்வ்வ்வ்வ்- Wow
ன்னு - புண்
உம்ம்மா - Kiss
நியா - நிலா

நாயான் - நான் தான்
பிஸ் - பிஷ்
பாவு - பால் [குடிக்குற பால்]
பா - பால் பந்து
இத்தி - இட்லி
த்தொசை -தோசை
சாக்கி - சாக்லேட்
பாட்டி - பாட்டி

நியா நியா வா வா - நிலா நிலா ஓடி வா


பா பா ஷிப் - பா பா பிளாக் ஷீப்


அம்மா அம்மா வா வா - அம்மா இங்கே வா வா


கடைசியா என்னோட டைப்பிஸ்ட் சொன்னது : "அடியே வாயாடி இருந்தாலும் ஒன்னேகால் வயசுக்கு நீ ரொம்ப ஓவரா பேசுற...அவ்ளோ தான் நான் சொல்வேன்..."

சரி அத்தை மாமா, இனிமேலாவது அம்மா கிட்ட போயி வியாக்யானம் சொல்ல மாட்டிங்கன்னு நம்புறேன்.ஒரு வேலை நான் சொல்றது புரியலன்னா நான் சின்ன புள்ளைன்னு கூச்சப்படாம என் கிட்ட கேளுங்க...
ஆசை கிச்சாக்களுடன் [ அகராதில விட்டு போச்சு....கிச்சா - முத்தம் ]
உங்கள் நிலா


Jan 24, 2009

கிருஷ்ணா! கிருஷ்ணா!


உங்க எல்லாருக்கும் நீங்க எப்டி பிறந்தீங்கன்னு உங்க அம்மா சொல்லிருப்பாங்க...ஆனா கிருஷ்ணர் சாமி எப்டி பிறந்தார்னு உங்கம்மா சொன்னாங்களா? எங்க அம்மா சொன்ன கதை நான் சொல்லட்டுமா ?
ஒரு ஊர்ல உக்ரேசன் என்கிற ராஜாக்கு தேவகி, ஹம்சன் அப்டின்ன்னு 2 பிள்ளைங்க இருந்தாங்களாம். ஹம்சன் ரொம்ப ரொம்ப கெட்ட பிள்ளையாம். ஹம்சன் பெரிய பிள்ளையா வளர்ந்த உடனே அவங்க அப்பாவையே ஜெயில்ல போட்டுட்டு ராஜா ஆகிட்டராம்.

கொஞ்ச நாள்ல தேவகி அம்மாவுக்கும் வாசுதேவர்க்கும் கல்யாணம் ஆச்சாம். அவங்களுக்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல ஹம்சனுக்கு ஒரு அசரீரி கேட்டுச்சாம்.அந்த அசரீரி சொல்லுச்சாம் .." ஹே ஹம்சா உன் சகோதரிக்கு பிறக்க போற எட்டாவது பையன் உன்னை கொன்னு போடுவான்"....அப்டின்னு சொல்லுச்சாம்...

ஹம்சனுக்கு ரொம்ப கோவம் வந்து தேவகியையும், வாசுதேவரையும் ஜெயில்ல தூக்கி போட்டனாம். எப்போ எல்லாம் அவங்களுக்கு குழந்தை பிறக்குதோ அப்போ எல்லாம் ஹம்சன் ஜெயிலுக்கு போயி குட்டி பாப்பா எல்லாரையும் கொன்னு போட்ருவானம்..
தேவகிக்கு எட்டாவது பாப்பா பிறக்க போகும் போது வாசுதேவரோட நண்பர் ராஜா நந்தாவோட மனைவி யசொதாவுக்கும் வயித்துக்குள்ள பாப்பா இருந்துச்சாம்.

தேவகிக்கு எட்டாவது குழந்தை நாடு ராத்திரில பிறந்துச்சாம். அது தான் நம்ம சாமி கிருஷ்ணா. கிருஷ்ணா பிறந்த அதே சமயம் யசொதாக்கு விஷ்ணு சாமி தங்கச்சி பாப்பாவா பிறந்தாராம்.

கிருஷ்ணர் பாப்பா பிறந்த உடனே ஒரு அசரீரி வாசுதேவர் கிட்ட சொல்லுச்சாம். " பாப்பாவை யமுனா நதி வழியா கொண்டு போயி யசோதா கிட்ட குடுத்துட்டு தங்கச்சி பாப்பாவை வாங்கிட்டு வந்துரு......யாருக்கும் குழந்தை பிறந்த விஷயம் தெரிய முன்னாடி ஜெயிலுக்கு திரும்பி வந்துடு" ன்னு




வாசுதேவர் உடனே கிருஷ்ணர் பாப்பாவை துக்கிட்டு ஜெயில் விட்டு கிளம்பும் போது ஜெயில் கதவு எல்லாம் திறந்து இருந்துச்சாம்....ஜெயில் காவலாளிகள் எல்லாரும் மயக்கத்துல இருந்தாங்களாம்; ...அவ்ளோ பெரிய யமுனா நதி வாசுதேவர் வந்ததும் ரெண்டா பிரிஞ்சு வழி விட்டுச்சாம்.; அவர் வேக வேகமா போயி கோகுலத்தில யசோதா வீட்ல கிருஷ்ணர் பாப்பாவை கட்டில்ல போட்டுட்டு தங்கச்சி பாப்பாவை துக்கிட்டு வந்துட்டாராம் .

ஜெயிலுக்கு வந்து தங்கச்சி பாப்பாவை தேவகி பக்கத்துல படுக்க வச்சதும் ஜெயில் கதவு எல்லாம் மூடிக்குச்சாம். காவலாளிகள் எல்லாரும் இப்போ முளிசுட்டாங்கலாம். பாப்பா அழுகை சத்தம் கேட்டு ஒரு காவலாளி வேகமா ஹம்சன் கிட்ட போயி சொல்லிட்டானாம்.

ஹம்சன் கோபமா பாப்பாவை கொல்றதுக்கு ஜெயிலுக்கு வந்தானாம்...தேவகி அழுதுக்கிட்டே கெஞ்சி கேட்டாங்களாம். .."ஹம்சா இது பொன் குழந்தை.....விட்டுடு : அப்டின்னு,,,,.ஹம்சன் தேவகியை தள்ளி விட்டுட்டு பாப்பாவை கைல எடுத்து தூக்கி வீசினானாம்....ஆனா நல்ல வேளை குட்டி பாப்பா கீழ விழலியாம்....ஆனா அப்டியே மேல போயி எட்டு கையோட துர்கா சாமியா மாறிடுச்சாம் ..துர்கா சாமி சொல்லுச்சாம் ...."ஹே ஹம்சா என்னை கொன்னா ஒன்னும் ஆகாது.....உன்னை கொள்ள போற கிருஷ்ணர் வேற இடத்துல இருக்குறார்" அப்டின்னு சொல்லிட்டு காணாம போயிடுச்சாம்.....

அந்த சமயத்துல கோகுலத்தில நந்த ராஜா நாடே கோலாகலமா கிருஷ்ணர் பிறந்ததை கொண்டாடுனாங்கலாம்.



இப்போ தெரியுதா கிருஷ்ணர் எவ்ளோ பெரிய சாமின்னு....நமக்கு எப்போயாவது ஹம்சன் மாதிரி எதுனா கஷ்டம் வந்துச்சுன்னா கண்ணை மூடிட்டு கிருஷ்ணா கிருஷ்ணா அப்டின்னு சொல்லிட்டே இருந்தோம்னா கிருஷ்ணர் வந்து நம்ம கஷ்டம் எல்லாத்தையும் போக வச்சுடுவார்....

சரியா?

Jan 21, 2009

பொங்கல் தெரு விழா.


எல்லாருக்கும் வணக்கம் .....புத்தாண்டு வாழ்த்துக்களும் கூட
ஊர் பக்கம் போயிருந்ததால நம்ம தச்சு பொறியாளர் ஒத்துழைப்பு குடுக்கல.....

என்ன செஞ்சீங்க அத்தை மாமா பொங்கலுக்கு.....கரும்பு சாப்பிட்டீங்களா? பனங் கிழங்கு சாப்பிட்டீங்களா?நான் இப்போ தான் முதல் முறையா கரும்பு சாப்பிடுறேன் ...யம்மாடியோவ் ...எம்புட்டு இனிப்பு......இப்போ தான் புரியுது அம்மா ஏன் என்னை கரும்பு சக்கரையேநு கூப்பிடுறாங்கன்னு ....அம்புட்டு இனிப்பாம் நான்.
சரி பொங்கலுக்கு ஒரு முக்கியமான விஷயம் நடந்துச்சு தெரியுமா.....எங்க தெருல நடந்த மாறு வேட போட்டில நான் கலந்துகிட்டு முதல் பரிசு வாங்கினேனாக்கும்.
அப்படி என்ன வேஷம் போட்ட கண்ணு? அப்டின்னு கேக்குறேங்களா ?
சொல்றேன் சொல்றேன் ..... ஸ்ட்ராபெர்ரி ....ஆமா....



சரி சும்மா வேஷம் மட்டும் போட்டா போதுமா.....மேடைல போயி எதுவும் பேச வேணாமா?
சரின்னு அம்மா என்னை கட்டாயப்படுத்தி உக்கார வச்சு ஒரு நாலு விஷயம் சொன்னாங்க...என்ன எல்லாம்?
-ஸ்ட்ரா பெர்ரில மட்டும் தான் விதை வெளிய இருக்குமாம் [ அட ...ஆமா ]

-வசந்த காலத்துல முதல்ல முளைக்குற பழம் ஸ்ட்ரா பெர்ரி [ அதான் எனக்கு தெரியுமே!]

மாமா உனக்கு தெரியுமா? எங்க வீட்ல ஸ்ட்ரா பெர்ரி செடி இருக்கே...அதுல ஒவ்வொரு வசந்த காலத்துலையும் நிறைய ஸ்ட்ரா பெர்ரி முளைக்குமே....கடைல வாங்குற ஸ்ட்ரா பெர்ரி விட எங்க வீட்ல முளைக்குற ஸ்ட்ரா பெர்ரி நல்லா இனிப்பா இருக்கும்...

சரி சரி.... அம்மா வேற என்ன சொல்ல சொன்னாங்க

-ஸ்ட்ராபெர்ரி ரோஜா குடும்பத்தை சேர்ந்த வகையாம் ....[ஏன்? அதுவும் அழகா இருக்குறதுனாலயா?.....அம்மா ஷ்ஷ் சொல்லிட்டாங்க]

-ஸ்ட்ராபெர்ரி நிஜமான பழ வகையை சேர்ந்தது இல்லியாம். [ அதுக்கு அம்மா சொன்ன காரணம் எனக்கு புரியல ]
அம்புட்டு தான்....
எல்லாம் நல்லா மனசுல போட்டுகிட்டேன். சரி மேடைல ஏறினதும் சொன்னேனா ?என்ன அத்தை நீங்க ...என்னால எப்டி சொல்ல முடியும்...எனக்கு தான் பேச தெரியாதே.....ஹி ஹி....

சரி எதுக்கு தான் பரிசு குடுத்தாங்க....இவ்ளோ குட்டி பொண்ணா இருந்துக்கிட்டு மேடை ஏறி அழாம சிரிச்சுக்கிட்டு நின்னதால தான்.....

என்ன சரி தானே... ?
சீக்கிரம் அடுத்த பதிவோட வரேன்
உங்கள்
-ஸ்ட்ரா பெர்ரி -

Dec 17, 2008

ரெக்கை கட்டி பறக்குதய்யா அம்மாவோட சைக்கிள்





என்ன அத்தை மாமா
எப்டி இருக்கு என் சைக்கிள்......சூப்பர் இல்ல....இதுல தான் இப்போ நான் கடைக்கு போறேன்...தனம் ஆச்சி வீட்டுக்கு போறேன்......என் பெட் ரூம்-ல இருந்து சாப்பிட பின்னாடி போகனும்னா கூட நான் இப்போ எல்லாம் சைக்கிள்ல தான் போறேன்...ஆமா பின்ன பெரிய புள்ளயா ஆயிட்டோம்ல.....நமக்குன்னு பொறுப்பு வந்துருச்சு.....இப்போவும் ஜெயா அம்மாவும் ஆச்சி அம்மாவும் தூக்கிட்டே போகனும்னு எதிர் பார்க்கலாமா? தப்பு தப்பு....I'm on my own now.....he ஹி


எல்லாம் இருக்கட்டும் ...சைக்கிள் யார் வங்கி குடுத்தான்னு கேக்கவே இல்லியே....
உடனே...சொல்லவே இல்லையே -நு இழுக்க கூடாது .....நம்ம சய்ச் (சதீஷ்) மாமா தான் வங்கி குடுத்தான் ...(குடுத்தாங்க )
பின்னாடி பார்த்தீங்களா...என்னோட பொம்மை எல்லாம் கூட வச்சுக்கலாம் ...


ஹ்ம்ம்......இல்ல இல்ல...உங்கள மாதிரி பெரிய பிள்ளைங்க எல்லாம் உக்கார முடியாது.....ஆமா...உடைஞ்சு போயிரும்.....
உங்க அப்பா கிட்ட சொல்லி உங்க வெயிட் தங்குற மாதிரி பெரிய சைக்கிள்-லா வாங்கிக்கோங்க....சரியா......

ஹ்ம்ம்....அழ கூடாது மாமா...அச்சோ....என்ன இது சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு .....ச்சே ..ச்சே ,...ஐயோ பார்க்க பாவமா இருக்கு
சரி ...சும்மா சைக்கிள் தொட்டு பார்த்துக்கோங்க.....பிடிச்சுகிட்டு கூடவே நடந்து வரறீங்களா?..........ஹ்ம்ம்...சரி....கொஞ்ச தூரம் மட்டும்..சரியா.....


5 நிமிடங்கள் கழித்து ...
மாமா...போதும்...என் சைக்கிள் விடு......நீ அங்க இங்கன்னு எல்லாத்தையும் நோண்டுற.....போ....இனிமே என் சைக்கிள் தர மாட்டேன்......[ முகத்தில் சப்-நு ஒரு அடி விழும் சத்தம் ]

Dec 4, 2008

கதை சொல்ல போறேன்


என்ன கதை சொல்ல போறேன்? எங்கம்மா எனக்கு எப்பவும் சொல்ற கதை சொல்ல போறேன்.


ஒரு ஊர்ல ஒரு ராஜாராணி இருந்தாங்களாம். அந்த ராஜா ராணிக்கு குட்டி பாப்பான்னா ரொம்ப பிடிக்குமாம். அதுனால அவங்க ரெண்டு பேரும் சாமி கிட்ட போயி சாமி சாமி எங்களுக்கு எப்போவும் சிரிச்சுக்கிட்டே இருக்குற ஒரு அழகான பாப்பா வேணும்னு வரம் கேட்டாங்களாம்.


சாமி .......ஆஹா இவங்கள பார்த்தா ரொம்ப நல்லவங்களா தெரியுதே. இவங்க கேட்ட வரத்தை இவங்களுக்கு குடுத்துருவோம். ஆனா எப்போவும் சிரிச்சுக்கிட்டே இருக்குற மாதிரின்னா எப்படி ? அப்டின்னு யோசிச்சுக்கிட்டே சாமி மேல பார்த்தாராம். அப்போ வானத்துல நிலா அழகா சிரிச்சுகிட்டு இருந்துச்சாம்.

உடனே சாமி ...ஹ்ம்ம்.. எனக்கு தெரிஞ்சு போச்சு ...இந்த ராஜா ராணிக்கு நான் இந்த அழகான நிலவு மாதிரி ஒரு அழகான குட்டி பாப்பா தர போறேன்னு முடிவு செஞ்சாராம்.
அப்புறம் அந்த ராஜா ராணிக்கு கொஞ்ச நாள்ல ஒரு நிலா....இல்ல இல்ல ..ஒரு பாப்பா பிறந்துச்சாம்.

அப்படி பிறந்ததுனால தான் எனக்கு நிலா-ன்னு பேர் வச்சாங்களாம்.

அப்பா இப்போவும் சொல்லுவாங்க..நான் ரெண்டு மாச பாப்பாவா இருக்கும் போதே அப்பா பார்த்து நல்லா பொக்கை வாய் தெரிய சிரிப்பேனாம்.

இது தான் எங்க அரச குடும்ப புகைப்படம்

எப்டி இருக்கு என்னோட பிறந்த புராணம் ?

Oct 25, 2008

அம்மாவின் பரிசு


எல்லாருக்கும் அவங்க அம்மா முதல் பிறந்த நாளுக்கு என்ன குடுப்பாங்க?
தங்க கம்மல், வெள்ளி கொலுசு, புது சட்டை....அப்டி தானே குடுப்பாங்க...
எங்கம்மா எனக்கு என்ன குடுத்தாங்க தெரியுமா.....
என் பிறந்த நாளுக்கு இதான் அம்மாவின் பரிசு
என்ன பர்த்தீங்களா? சுப்பர் இல்ல பொன்னாத்தா?